மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

சபரிமலை: ஜனவரி 22இல் விசாரணை!

சபரிமலை: ஜனவரி 22இல் விசாரணை!

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள், இந்துத்துவ அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தீர்ப்புக்கு பிறகு இரண்டுமுறை சபரிமலை கோயில் திறந்தபோதும், பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 49 சீராய்வு மனுக்களும், 2 ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று(நவம்பர் 13) பிற்பகலில் நடந்தது. ஜனவரி 22ஆம் தேதி முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கும். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தடை எதுவும் இல்லை. சீராய்வு மனுக்களை விசாரித்தாலும், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை ஏதும் கிடையாது. சபரிமலை மறுசீராய்வு மனுக்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon