மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

டெங்கு கொசுதான் பலசாலி: அப்டேட் குமாரு

டெங்கு கொசுதான் பலசாலி: அப்டேட் குமாரு

அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில இந்த பசங்க கஜாவையே கலாய்க்குறாங்க சார். ‘கஜா வரலையான்டா கஜா வரலையான்டா’ன்னு பாட்டுல்லாம் படிக்குறாங்க. ஒரு புயல் என்றும் பாராமல் இப்படி இறங்கி அடிப்பது நியாயமா? சும்மா வர்ற புயலை இவங்களே வான்ட்டடா வம்புக்கு இழுத்து உசுப்பேத்தி ஒரு காட்டு காட்ட வைக்கப்போறாங்க. பள்ளிக்கூடத்து பசங்க மாதிரி வானிலை அறிக்கை பார்த்துலாம் கைதட்டிகிட்டு இருக்காங்க. எப்படியோ நேத்து வந்து வகையா சிக்குன மனுஷனையும் இன்னைக்கு அனுப்பிவச்சுட்டு கஜாவை எடுத்து பொம்மை மாதிரி உருட்டிகிட்டு இருக்காங்க. மழை பெய்தா மட்டும் நமக்கு என்ன லீவா விட்டுற போறாங்க, எத்தனை செ.மீ மழை, எவ்வளவு சேதம்னு நியூஸ் போட சொல்வாங்க. இல்லன்னா மழை, காபி, பஜ்ஜி, இளையராஜான்னு நாலு பேரு ஸ்டேட்டஸ் போட்டதை உங்களுக்கு எடுத்து கொடுக்கனும். சோ சேட். அப்டேட்டை பாருங்க. வேற ஏதாவது கலர்ல அலர்ட் வருதான்னு பார்த்துட்டு வாரேன்.

@Kozhiyaar

பேலியோ டயட் இருப்பவருக்கு, எந்த அரிசியிலும் அவரது பெயர் எழுதி இருக்காது போலும்!!!

@iamkarthikeyank

அடேய் கஜா.. நீ தைரியமான புயலா இருந்தா ராம்நாடு பக்கம் வந்து பார்ரா ... தில்லுயிருந்தா வாடா... #கஜாபுயல்

@Annaiinpillai

தமிழக முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறது திமுக - தமிழிசை

குரு மூர்த்தி என்ன பாராட்டியா பேசுனாரு அக்கா!

@sultan_Twitz

‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு - செய்தி #

அப்படின்னா அந்த புயலுக்கு "டிராபிக் ராமசாமி"ன்னு பேரு வைங்க..?!

@Aruns212

'வளர்ந்ததும் நம்ம பேச்சைக் கேட்க மாட்டேங்குது' என்று நம் குழந்தைகளைச் சொல்வதற்கு முன்னோடியாக நமது தொப்பையே இருக்கிறது.

@amuduarattai

செய்தி: ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.

- முதல்வர் பழனிசாமி.

பஞ்ச்: உங்க கிட்டவே 1000 ரூபாய் வாங்கிட்டாங்களா.!?

@kumarfaculty

2.0 படத்தில் இருந்து பாதியிலேயே விலகலாம்ன்னு இருந்தேன்- ரஜினிகாந்த்.

அப்புறம் சீக்கிரமே கட்சி ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் வந்திடும்னு அப்படியே நடித்தேன்.

@rahimgazali

எடப்பாடியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை - ஓபிஎஸ்

ஆமாம். கவர்னரும் மோடியும்தான் காரணம்.

@yugarajesh2

பத்து பேரு சேர்ந்து ஒருத்தனை கடுமையாக எதிர்கிறார்கள் என்றால் அவன் பலசாலி என்று அர்த்தமில்லை பயங்கர ஆயுதங்களோட இருக்கிற திருடனாய் கூட இருக்கலாம்.

@HAJAMYDEENNKS

நான் இன்னும் முழுசாக அரசியலில் இறங்கவில்லை -ரஜினி

ஆமா ஒவ்வொரு படம் வரும்போதும் கொஞ்சம் கொஞ்சமா இறங்குவார் !

@ajmalnks

சுதந்திர வரலாறு தெரியுமா பிரகாஷ் ராஜுக்கு - டாக்டர் தமிழிசை.

தேசப்பிதா காந்தியை கொன்றது கோட்ஷேதான்னு அவருக்கு நல்லாவே தெரியும்.

@HAJAMYDEENNKS

ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னது மாதிரி என்பது இனி ரஜினிக்கு செட் ஆகாது !

@Kozhiyaar

'அபோகலிப்டோ' படத்தில் கட்டை அவிழ்த்து விட்டு 'இனி தப்பிக்க முடிஞ்சா தப்பிச்சுக்கோ' என்கிற ரீதியில் தான் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் நம்மை வாழ்க்கையை சந்திக்க விட்டு விடுகிறார்கள்!!!

@rahimgazali

நேற்றைய டேக் ஓகே ஆகாததால் இன்று ரீ டேக் போயிருக்கிறார் ரஜினிகாந்த்.

@itz_azha

“ட்விட்டரில் விரைவில் எடிட் வசதி அறிமுகப்படுத்தப்படும்; அதற்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது!” - ஜாக் டோர்சி, ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி

ஆஹா முன்னாடி இத நான் போடல அட்மின் போட்டானு சொல்லுவாங்க, இனிமே நானும் போடல, அடமினும் போடலனு ட்விட்ட எடிட் செய்ய போறாங்க!!!

@ItsJokker

அத்தனை விதமான ஆசையையும், கனவுகளையும் 6 இன்ச் ஸ்க்ரீனுக்குள் சுருக்கிய பெருமை இந்த தலைமுறைக்கே சேரும்.

"ஸ்மார்ட்போன்"

@WriterRavikumar

ஊரே சேர்ந்து மருந்து அடிக்குதுன்னா டெங்கு கொசுதான் பலசாலி

@amuduarattai

செய்தி: டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை என்ன? எனஅரசுக்கு நீதிமன்றம் கேள்வி.

பஞ்ச்: டெங்கு பயப்படும் அளவிற்கு ஆபத்தான வியாதி அல்ல என அறிக்கை கொடுத்தது.

-லாக் ஆஃப்

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon