மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

தர்மபுரி மாணவி: அதிமுக ரூ.5 லட்சம் நிதியுதவி!

தர்மபுரி மாணவி: அதிமுக ரூ.5 லட்சம் நிதியுதவி!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பாலியல் வன்முறையால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கடந்த 5ஆம் தேதியன்று, தர்மபுரி மாவட்டம் சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சவுமியா, அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்ற இரண்டு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உடல்நிலை மோசமானதையடுத்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சவுமியா கடந்த 10ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

மாணவியை வன்கொடுமை செய்த இருவரில் ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டார். மற்றொருவர் தாமாகவே நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது, இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon