மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

ஆன்லைனில் பெருகும் வேலைவாய்ப்பு!

ஆன்லைனில் பெருகும் வேலைவாய்ப்பு!

சென்ற அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை 21 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஆன்லைன் வேலைவாய்ப்புத் தளமான நவ்கரி.காம் ஒவ்வொரு மாதமும் பணியமர்த்தும் நடவடிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் நவ்கரி வேலை தேடும் குறியீடு 21 சதவிகிதம் உயர்ந்து 2,088 புள்ளிகளாக இருந்துள்ளது. சென்ற ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இது 1,728 புள்ளிகளாக மட்டுமே இருந்தது. அக்டோபர் மாதத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில்தான் அதிகளவு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் விசா பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டிருந்த மந்தநிலை சீராகி தற்போது மீண்டும் பணியமர்த்தும் நடவடிக்கை மேம்பட்டுள்ளதாக நவ்கரி ஆய்வறிக்கை கூறுகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்கள் அதிகரித்து வந்தாலும் வேலைவாய்ப்புகள் அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளன. ஊழியர்களுக்கான அனுபவத்தைப் பொறுத்தவரையில், மூன்று வருடம் வரை அனுபவம் கொண்டவர்களுக்கான தேவை 24 சதவிகிதமும், 4 முதல் 7 வருட அனுபவம் கொண்டவர்களுக்கான தேவை 22 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது. நகர வாரியாகப் பார்த்தோமேயானால், சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் ஆன்லைன் பணிகள் 23 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளன.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon