மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

கல்வி: அமெரிக்காவை நாடும் இந்தியர்கள்!

கல்வி: அமெரிக்காவை நாடும் இந்தியர்கள்!

கடந்த ஒரு ஆண்டில் அமெரிக்காவில் கல்வி பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை 5.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

சர்வதேச கல்விச் சேவை குறித்த அமெரிக்காவின் ஓபன் டோர் ரிப்போர்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டில் இதுவரையில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 1,96,271ஆக இருக்கிறது. இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 1,86,000 ஆக மட்டுமே இருந்தது. அதாவது இந்த ஆண்டில் 5.4 சதவிகிதம் கூடுதலான இந்தியர்கள் அமெரிக்காவில் கல்வி கற்கின்றனர். இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அமெரிக்காவில் கல்வி கற்கும் இந்தியர்களின் எண்ணிக்கை வளர்ச்சி கண்டுள்ளதாக தூதரக விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோசெப் பாம்பெர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நவம்பர் 13ஆம் தேதி அமெரிக்கா - இந்தியா கல்வி அறக்கட்டளையில் பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியர்கள் சிறந்த கல்வியை விரும்புகின்றனர்; அதை அமெரிக்கா சிறப்பாக வழங்கிவருகிறது. அமெரிக்காவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்களில் இந்தியர்களின் பங்கு மட்டும் 18 சதவிகிதமாகும். இது சீனாவை விட சற்றுக் குறைவுதான். அமெரிக்காவில் அதிகமாகப் பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது” என்றார்.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்து கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 12.5 சதவிகிதம் உயர்ந்து 4,704 ஆக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon