மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

மீண்டும் வேகமெடுக்கும் கஜா

மீண்டும் வேகமெடுக்கும் கஜா

4கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 12 கி.மீ அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல், 7 கி.மீ., 5 கி.மீ. 4 கி.மீ என குறைந்து கொண்டே வந்தது. தற்போது, மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி 100 முதல் 125 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும்.மூன்று நாளைக்கு முன்பு மணிக்கு 13 கிமீ வேகத்தில் கஜா புயல் நகர்ந்தது.

நவம்பர் 15 ஆம் தேதி பிற்பகல் பாம்பன் மற்றும் கடலூர் இடையே புயல் கரை கடக்கக்கூடும். சென்னைக்கு கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்கள் நவம்பர் 18ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பிச்சாவரத்தில் நாளையும், நாளை மறுநாளும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கண்காணிப்பு

தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.அதில் கஜா புயலால் தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.அணைகளின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தை அவ்வப்போது கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon