மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

பூமிப்பந்தின் ஒவ்வொரு புள்ளியிலும்...

 பூமிப்பந்தின் ஒவ்வொரு புள்ளியிலும்...

அவர் சீரடி சாய்பாபாதானே... ஏன் அக்கரைப்பட்டி சாய்பாபா என்கிறீர்கள்?

இப்படி ஒரு கேள்வியை ஓர் அன்பர் அன்போடு கேட்டிருந்தார். அவரது கேள்வியில் அகங்காரம் இல்லை, அறியாமையே இருந்தது. இதை அறியாமை என்பதைவிட அறிய வேண்டும் என்ற தேடல் என்றும் பாசிட்டிவ் பாஷையில் சொல்லலாம்.

சரி...சீரடி பாபா அக்கரைப்பட்டிக்கு எப்படி வந்தார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். என்.டி.சி. குழுமத் தலைவர் கே.சந்திரமோகன் அவர்களின் கனவில் உதித்த பாபா அவருக்கு இட்ட கட்டளைப்படிதான் பொன்விளையும் பூமியாம் அக்கரைப்பட்டியிலே செம்மாந்து நிற்கும் சரித்திர சாய்பாபா ஆலயம் ஸ்ரீசாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட் சார்பிலே கட்டப்பட்டது என்பதைப் பார்த்திருக்கிறோம்.

இப்போது அந்த அன்பரின் அறிய வேண்டும் என்ற தேடலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் காண்போமா?

“ பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும்.

பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது.

இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.

எனவேதான் அக்கரைப்பட்டியும் அவருக்கு சீரடிதான். இந்த பூமிப் பந்தின் ஒவ்வொரு புள்ளியிலும் சாய்பாபாவின் அருட்தடம் பதிந்திருக்கிறது. பல இடங்களில் அது நம் ஊனக் கண்களுக்குத் தென்படாமல் பொதிந்திருக்கிறது. பாபாவால் ஏற்பட்ட ஞானக் கண் திறப்பால் அக்கரைப்பட்டி போன்ற இடங்களில் சாய்பாபாவின் அருட்தடம் பொலிந்திருக்கிறது.

அக்கரைப்பட்டிக்கு வாருங்கள்... அருள் மழையில் நனையுங்கள்! அறியாமைக் கறையைத் தொலையுங்கள்!

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
[email protected]
http://akkaraipattisaibaba.com/

விளம்பர பகுதி

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon