மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

எனது வலிமையின் ஆதாரம்: சோனாலி

எனது வலிமையின் ஆதாரம்: சோனாலி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்கொள்ளும் வேளையில் அவ்வப்போது சுய ஊக்கப் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் தனது திருமணம் குறித்து அவர் பதிவிட்டுள்ள நெகிழ்ச்சிப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அதில், “நான் இதை எழுத ஆரம்பிக்கும்போதே... எனக்குத் தெரியும் எனது உணர்வுகளையும் நினைவுகளையும் வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது என்று.

கணவர். எனக்கு அவர் துணைவர். எனது நண்பர். எனது பாதுகாப்பு அரண். இவைதான் எனக்கு என் கோல்டிபெல். திருமணம் என்பது ஒருவொருக்கொருவர் துணை நிற்பதே. நோய்வாய்ப்பட்ட போதும் ஆரோக்கியமாக இருந்தபோதும் கோல்டி எனக்கு எப்படி துணை நின்றார் என்பது இறைவனுக்கே தெரியும்.

நிறைய பேருக்குத் தெரிவதில்லை, புற்றுநோய் என்பது தனி நபரின் போராட்டம் அல்ல என்பது. அது ஒட்டுமொத்த குடும்பத்தின் போராட்டம். எனது சிகிச்சைப் பயணத்தை நான் தொடர முடிகிறது என்றால் என்னுடைய எல்லா பொறுப்புகளையும் கோல்டி தனது தோளில் சுமந்து கொண்டார் என்பதே காரணம். நான் இரண்டு கண்டங்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருக்கிறேன். அங்கே வீட்டை அழகாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார் கோல்டி.

நன்றி என்று மட்டும் சொல்வது குறைந்த அங்கீகாரமாகிவிடும். இருந்தாலும் சொல்கிறேன். எனது வலிமையின் ஆதாரமாக, எனது அன்பாக, மகிழ்ச்சியாக எனது ஒவ்வோர் அடியிலும் துணையாக இருப்பதற்கு நன்றி. என்னுடன் அங்கமாக இருப்பவர் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்” என்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது