மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

அறிவு - அழிவு: என்ன சம்பந்தம்?

முதலை துரத்தினதால ரொம்ப வேகமா நீந்தி வந்து கரை சேர்ந்தான் பரி. போன தடவை தூக்கி விட நீலன் இருந்தான். இப்போ நீலனைப் பார்க்க நேரம் இல்ல.

ஏன்னா, முதலை ஆற்றை விட்டு வெளியே வந்தும் துரத்தும். அதுவும் இந்த முதலையோட கண்கள் பச்சை நிறத்துல இருந்துச்சு. மத்த முதலைங்க மாதிரி இல்லாம, இதோட முன்பற்கள் பாம்பு பற்கள் மாதிரி இருந்துச்சு. அதனால திரும்பி பாக்காம வேகமா ஓடுனான் பரி.

"நில்லு பரி. அந்த முதலை தண்ணிய விட்டு வெளிய வராது." சத்தமா சொன்னான் நீலன்.

சட்டுன்னு நின்னு, ஏன் அந்த முதலை தண்ணியை விட்டு வராதுன்னு சந்தேகத்தோடு கேட்டான் பரி.

“அந்த முதலைக்கு ஒரு சாபம் இருக்கு, அது வெளிய வராது”ன்னும் மட்டும் சொல்லிட்டு அமைதியாகிட்டான் நீலன்.

நீலன் கேள்வி கேட்காமலே பரி பேச ஆரம்பிச்சான்.

"என்கிட்ட யாரும் நீச்சலடிக்க சொல்லல. நானாத்தான் நீச்சலடிச்சேன். முதலை துரத்தவும் எனக்குள்ள இருந்து ஓர் உணர்ச்சி வேகமா நீச்சலடிக்க சொல்லுச்சு. இல்லேன்னா செத்திருவேன்னு தோணுச்சு. அதனாலதான் நீச்சலடிச்சேன்." சொன்னான் பரி.

"அதுக்குப் பேர்தான் தற்காப்புணர்ச்சி பரி. அதை உணர்ச்சி மூலமா வெளிப்படுத்துறது அறிவு. தற்காப்புணர்ச்சி, உணவு, உறைவிடம் - இதையெல்லாம் கட்டுப்படுத்துறது அறிவு. அது எல்லையில்லாம வளர்ந்ததோட விளைவுதான் இப்போ நடக்குற அழிவு" விளக்கமா சொன்னான் நீலன்.

அறிவு - அழிவு. இது நல்லா மேட்ச் ஆகுதுன்னு மட்டும்தான் பரிக்குப் புரிஞ்சது. வேற எதுவும் புரியலை. புரியலைனு சொன்னா திரும்பவும் ஆற்றுக்குள்ள தள்ளிவிட்டுடுவானோனு பரி வாயே திறக்கல.

ஆனா, அவன் எதிர்ல நடந்த அந்த விஷயத்தைப் பார்த்து அவனை அறியாம அவன் வாய் பிளந்தது!

- நரேஷ்

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon