மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்று அதன் பயன்களைப் பெறும்படி ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

அபுதாபியில் நவம்பர் 12ஆம் தேதி அபுதாபி டிஸ்கவர்டு ஸ்மால் ஃபீல்டு சாலையோரக் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அவர் பேசுகையில், "எந்த ஒரு நாடும் அல்லது நிறுவனமும் கூட்டு முயற்சி இல்லாமல் தனித்துச் செல்ல இயலாது. இந்திய வளர்ச்சியின் பெரும் பகுதியை உருவாக்க முதலீட்டாளர்கள் பங்கேற்க வேண்டும். உலகின் எரிசக்தி பயன்பாட்டில் இந்தியா தற்போது மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் எரிசக்தி பயன்பாடு ஆண்டுக்கு 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

தற்போது 229 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ள இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான தேவை, 2040ஆம் ஆண்டில் 607 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும். எரிசக்தியில் தற்போது 6.5 சதவிகிதமாக உள்ள இயற்கை எரிவாயுவின் பங்கை 2022ஆம் ஆண்டுக்குள் 15 சதவிகிதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயு வர்த்தக மையத்தை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளோம். இதைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் இந்திய அரசால் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. எரிவாயுத் துறையில் அரசு தரப்பிலிருந்து பல்வேறு கொள்கை மாற்றங்களும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon