மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

டெல்லி: நடைபயிற்சி செல்ல முடியவில்லை!

டெல்லி: நடைபயிற்சி செல்ல முடியவில்லை!

டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசுபாட்டினால் காலையில் நடைபயிற்சி கூட செல்ல முடியவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (நவம்பர் 13) கூடிய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா கூறுகையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாகவுள்ளது. “என்னால், காலையில் நடைபயிற்சிக்குக்கூட செல்ல முடியவில்லை” என்று கூறினார்.

தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் காற்றின் தரம் அபாய அளவை தாண்டியது. பட்டாசு வெடித்தல், பொருட்களை எரித்தல் போன்ற செயல்பாடுகளினால் காற்றின் தரம் சுவாசிக்க கூடிய வகையில் இல்லை என்று நீதிபதி கூறினார்.

டெல்லியில் என்ன நடக்கிறது. மக்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்குக் காற்று மாசுபாடைந்துள்ளது என்று இந்திய சட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். டெல்லியில் காற்றில் PM10, PM2.5 கரிம நுண்துகள்கள் அளவு கூடிக்கொண்டே இருக்கிறது. 19 இடங்களில் காற்று தரம் அதிகமாகவும், 17 இடங்களில் மிக மோசமாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முடிந்தவரை மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon