மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

இந்தியில் அறிமுகமாகும் அமேசான் ப்ரைம் வீடியோ!

இந்தியில் அறிமுகமாகும் அமேசான் ப்ரைம் வீடியோ!

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது அமேசான் ப்ரைம் வீடியோ சேவையை இந்தி மொழியில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் அமேசான் நிறுவனம் அதன் ப்ரைம் வீடியோ சேவையை இந்தியில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் அந்த செயலியினுள் சர்ச், நேவிகேஷன், வாடிக்கையாளர்கள் தொடர்பு உள்ளிட்ட சேவைகளை இந்தி மொழியில் பயன்படுத்தக் கொள்ளலாம். இதுகுறித்து அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியா நிறுவனத்தின் இயக்குநரும், தலைவருமான கவுரவ் காந்தி கூறுகையில், "ப்ரைம் வீடியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை இந்தியாவில் அதிகப்படுத்த வீடியோவின் உள்ளடக்கங்களை மட்டும் அவர்களின் சொந்த மொழியில் வழங்கினால் போதாது. செயலி, இணையதளம் என அனைத்தும் அவர்களின் சொந்த மொழியில் பயன்படுத்தும்படி இருக்க வேண்டும். அந்த வகையில் ப்ரைம் வீடியோ சேவையை இந்தி மொழியில் அறிமுகம் செய்வதில் பெருமையடைகிறோம். இதன் மூலம் எங்களது வாடிக்கையாளர் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையைப் பெற கணினி, ஆண்ட்ராய்டு அல்லது iOS கருவியில் செட்டிங்க்ஸ் மெனுவில் உள்ள மொழி என்ற ஆப்ஷனில் இந்தியைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த வசதியினை ஸ்மார்ட் டிவி, Xbox One மற்றும் PS3 கருவியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon