மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

அசுர வளர்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ!

அசுர வளர்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 20.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளதோடு, சந்தாதாரர் இணைப்பில் 5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையையே ஆட்டம்காண வைத்துள்ளது. இந்த நிறுவனம் தொடக்கத்தில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் சேவை வழங்கி வாடிக்கையாளர்களைத் துரிதமாகத் தனது சேவைக்குள் ஈர்த்து வருகிறது. ஜியோவால் சந்தையில் மூண்டுள்ள கட்டணப் போரால் சில நெட்வொர்க் நிறுவனங்கள் மூடப்பட்டும், சில நிறுவனங்கள் இணைந்தும் உள்ளன. இந்த நிலையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 20.5 சதவிகிதமாக உயர்ந்துவிட்டதாக இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை மாதத்துக்கு 5.4 சதவிகிதம் அதிகரித்து வருவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 1.6 சதவிகிதமும், பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 0.6 சதவிகிதமும் குறைந்துள்ளது. ஜியோ வழங்கிய நெருக்கடியால் ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைந்துள்ள நிலையில் அவற்றின் சந்தைப் பங்கு தற்போது 37.9 சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவின் நெட்வொர்க் சந்தாதாரர் சந்தையில் வோடஃபோன் - ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து 88 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon