மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

நிக்கி கல்ராணிக்கு வந்த சவால்!

நிக்கி கல்ராணிக்கு வந்த சவால்!

தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நடிகை நிக்கி கல்ராணி, மீண்டும் மலையாளப் பட உலகின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.

'1983' எனும் மலையாள படம் வாயிலாக சினிமாவிற்குள் என்ட்ரி ஆன நிக்கி கல்ராணிக்கு அந்தப் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அந்தப் படத்திற்காக ஃபில்ம்பேர், சைமா உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றார். பின்னர் கன்னடம், மலையாளம் என வலம்வந்த அவர், டார்லிங் படத்தின் வாயிலாக தமிழிலும் என்ட்ரி ஆனார்.

அதன் பின்னர் மளமளவென தமிழ்ப் படங்களில் புக் ஆகி நடித்து வரும் அவருக்குத் தற்போது சார்லி சாப்ளின் -2, கீ, பக்கா என சில படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில் மீண்டும் மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார் நிக்கி. அந்தவகையில், இதிகாஷா-2 எனும் படத்தில் படத்தில் அவர் தற்போது நடிக்கவுள்ளார். இயக்குநர் பினு எஸ் இதை இயக்கவுள்ளார். கிளாமர் கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, இதில் பழங்குடியின பெண்ணாக நடிக்கவிருப்பதால் நடிப்பு ரீதியாக அவருக்கு இது ஒரு சவால் மிக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திரஜித்தின் மனைவிக்கும் நிக்கிக்கும் இடையே ஏற்கெனவே நட்பு இருந்தாலும்,இந்திரஜித்தும் நிக்கியும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 25ஆம் தேதி கொச்சியில் தொடங்குகிறது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon