மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

பெயர் மாற்றம்: மேற்கு வங்கம் கோரிக்கை நிராகரிப்பு!

பெயர் மாற்றம்: மேற்கு வங்கம் கோரிக்கை நிராகரிப்பு!

மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது தொடர்பாக அம்மாநிலத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்தே கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என்று மாற்ற முடிவெடுக்கப்பட்டு, பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் மத்திய உள் துறை அமைச்சகத்துக்கும் அனுப்பப்பட்டது. உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியப் பின்னர் அதிகாரப்பூர்வமாகப் பங்களா என அம்மாநிலத்தின் பெயர் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதற்கு பதிலாக பஸ்சிம்பங்கா என்று பெயரை வைக்குமாறும் யோசனை தெரிவித்துள்ளது. இந்த பெயர் மாநில பாஜகவின் ஆதரவு பெற்றது. பங்களா என்ற பெயர் பங்களாதேஷ் என்ற பெயரைப் போல ஒலிப்பதால், மேற்கு வங்கத்தின் முடிவுக்கு மத்திய வெளியுறவுத் துறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், “மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றால், அது பஸ்சிம்பங்கா என்றுதான் மாற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். முன்னதாக கடந்த 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் பெயர் மாற்றம் தொடர்பாக மேற்கு வங்கம் அனுப்பிய தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon