மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

சிபிஐ: இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு!

சிபிஐ: இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு!

சிபிஐ சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கிய வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட மனோஜ் பிரசாத்தின் ஜாமீன் மனுவை நேற்று (நவ—13)டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ராக்கேஷ் அஸ்தானா, மொய்ன் குரேஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளரிடமிருந்து (அவரை ஒரு வழக்கிலிருந்து விடுவிக்க) 5 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த வழக்கில், வெளிநாட்டிலிருந்து கொண்டு மனோஜ் பிரசாத் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாக சிறையிலிருந்து வரும் மனோஜ் தற்போது ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி நஜ்மி வஜிரி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனோஜ் பிரசாத் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞரான சித்தார்த், ஒரு மாதமாக மனோஜ் பிரசாத் சிறையிலிருக்கிறார். அவரை யாரும் இதுவரை விசாரிக்கவில்லை. அவர் சிறையிலிருப்பது தேவையற்றது, எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு கோரினார். இதனைத் தொடர்ந்து நீதிபதி கூறுகையில்,மனோஜ் பிரசாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையானவை, விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் அவரை ஜாமீனில் விடமுடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon