மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

ரூ.12,000 கோடியைச் செலுத்தும் ரிசர்வ் வங்கி!

ரூ.12,000 கோடியைச் செலுத்தும் ரிசர்வ் வங்கி!

ரொக்க நிலையைச் சீர்செய்ய ரூ.12,000 கோடி தொகையை வங்கி அமைப்புக்குள் ரிசர்வ் வங்கி செலுத்தவுள்ளது.

அரசுப் பத்திரங்களை வாங்குவதன் வாயிலாக வங்கி அமைப்புக்குள் நவம்பர் 15ஆம் தேதியன்று ரூ.12,000 ரொக்கப் பணத்தை செலுத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ரொக்கத்தின் தற்போதைய சூழ்நிலையை மதிப்பிட்டதனாலும், வரும் காலத்தின் ரொக்கத் தேவையைக் கணக்கில் கொண்டும் 2018 நவம்பர் 15ஆம் தேதியன்று திறந்த சந்தை செயல்பாடுகளின் கீழ் ரூ.12,000 கோடிக்கு அரசு பத்திரங்களை வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.எல் &எஃப்.எஸ் போன்ற நிறுவனங்கள் செய்த தவறுகளால் ரொக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைப் போக்குவதற்கு ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை உதவிகரமாக இருக்கும். 2018-19ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் ரொக்கப் பற்றாக்குறை ஏற்படும் என்று ஏற்கெனவே ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ரொக்கத்தின் நிலையைப் பொறுத்து ரிசர்வ் வங்கி தனது தீர்மானங்களை எடுக்கும். தனிநபர்கள் எவ்வளவு பத்திரங்களை வாங்கலாம் என்ற வரம்பை நிர்ணயிப்பதற்கான உரிமை தனக்கு இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon