மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

நெடுஞ்சாலைத் திட்டத்தில் குவியும் முதலீடு!

நெடுஞ்சாலைத் திட்டத்தில் குவியும் முதலீடு!

தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாக நிதி திரட்டும் திட்டத்தில் எட்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான ஒப்பந்தங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளது.

சுங்கச் சாவடி செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.9,681 கோடி முதலீட்டை அரசு ஈர்த்திருந்தது. அதன் இரண்டாம் கட்டமாகத் தற்போது 586 கிலோ மீட்டர் அளவிலான எட்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பையில் இந்த வாரம் நடைபெறும் சாலையோரக் கண்காட்சி நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தனியார் முதலீட்டாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை வசூலித்து அதன் வாயிலாக முதலீட்டை விட அதிகளவில் நிதி திரட்ட முடியும் என்பதால் இத்திட்டம் முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் சாலையோரக் கண்காட்சி நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி பங்கேற்கிறார். சுங்கச் சாவடி செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி, நியூயார்க், டொராண்டோ ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக சாலையோரக் கண்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 30 ஆண்டுகள் முதிர்வு கொண்டதாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon