மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 30 மா 2020

அயனாவரம் சிறுமி: விசாரணை ஒத்திவைப்பு!

அயனாவரம் சிறுமி: விசாரணை ஒத்திவைப்பு!

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.

சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 11 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அங்கு பணிபுரிந்து வந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டது. அயனாவரம் மகளிர் போலீசார் இந்த வழக்கின் விசாரணையை முடித்து, 17 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை, நேற்று (நவம்பர் 13) மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 17பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 17 பேருக்கும் தனித்தனியாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து,17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon