மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

அமெரிக்க நிறுவனங்களைத் தொடங்கிய குடியேறியவர்கள்!

அமெரிக்க நிறுவனங்களைத் தொடங்கிய குடியேறியவர்கள்!

அமெரிக்காவின் ஒரு பில்லியன் டாலருக்கு மதிப்புகொண்ட நிறுவனங்களில் 50 விழுக்காடு குடியேறியவர்களால் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அமெரிக்க தேசியக் கொள்கை நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்பு கொண்ட அமெரிக்க நிறுவனங்களில் பாதிக்கும் மேலானவை (55 விழுக்காடு) குடியேறியவர்களால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் 80 விழுக்காட்டினர் குடியேறியவர்களாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வின்போது இருந்த எண்ணிக்கையை விடத் தற்போது எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அமெரிக்காவில் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புகொண்ட 91 நிறுவனங்களில் 50 நிறுவனங்கள் குடியேறியவர்களால் தொடங்கப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டில், குடியேறிய நிறுவனர்களின் பட்டியலில் 14 தொழில்முனைவோருடன் இந்தியா முதலிடத்தில் இருந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் எட்டு தொழில்முனைவோருடன் இந்தியா மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த ஒன்பது தொழில் முனைவோரும், இஸ்ரேலைச் சேர்ந்த ஒன்பது தொழில்முனைவோரும் இப்பட்டியலில் உள்ளனர். 2016ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலும், மூன்றாம் இடத்தில் கனடாவும் இருந்துள்ளது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon