மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

திருவாரூர்: 3ஆம் கட்ட ஆய்வு!

திருவாரூர்: 3ஆம் கட்ட ஆய்வு!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும்தொல்லியல் துறையினரும் இன்று மூன்றாம் கட்ட ஆய்வை மேற்கொண்டனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 4,359 சிலைகள்பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐம்பொன் சிலைகளும், உலோகச் சிலைகளும் அடங்கும். இந்த பாதுகாப்புமையத்தில் உள்ள சிலைகள், திருவிழாக் காலங்களில் அந்தந்த கோயில்களுக்குக் கொண்டு செல்லப்படும்; விழா முடிந்ததும்,மீண்டும் இம்மையத்திற்குக் கொண்டு வந்து வைக்கப்படும்.

இது போன்ற நேரங்களில் வெளியே கொண்டு செல்லப்படும் சுவாமி சிலைகள் மாற்றப்பட்டு, போலிச் சிலைகள் பாதுகாப்புமையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அங்குள்ள சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும், தொல்லியல் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிலைகளின் தன்மைகுறித்து இக்கோயிலில் நடத்தப்பட்ட இரண்டு கட்ட ஆய்வில் 504 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்று (நவம்பர் 14) திருவாரூர் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் மூன்றாம் கட்ட ஆய்வைச் சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் தொடங்கியுள்ளனர். பத்தூர் விஸ்வநாத சுவாமி ஆலயம், திருக்கொள்ளிக்காடுஅக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 19 கோயில்களின் சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்அதிகாரிகள். இன்று தொடங்கிய இந்த ஆய்வு, மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளனர் சிலைக் கடத்தல்தடுப்புப் பிரிவு போலீசார்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon