மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 1 ஏப் 2020

ஜெயலலிதா புதிய சிலை: இன்று திறப்பு!

ஜெயலலிதா புதிய சிலை: இன்று திறப்பு!

ஜெயலலிதாவுக்குப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலையை, அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் இன்று திறந்து வைக்கின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த நாள் விழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அதிமுக தலைமை கழகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. ஆனால், சிலையில் ஜெயலலிதாவின் முகத் தோற்றமே இல்லை, ஜெயலலிதாவின் முகத்தையே மாற்றி வடிவமைத்திருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து ஜெயலலிதாவுக்குப் புதிய சிலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி புதிய சிலை செய்யும் பணி ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வடிவமைக்கும் பணி முடிந்த நிலையில் ஜெயலலிதாவின் புதிய சிலை கடந்த மாதம் அதிமுக தலைமை அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. சில நாட்களாக அங்கு சிலை நிறுவும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று (நவம்பர் 14) திறக்கப்படவுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் சிலையைத் திறக்க உள்ளனர். விழாவில் அமைச்சர்களும், அதிமுகவின் நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon