மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று சென்னைமாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு நாட்டின் முதல் சட்ட அமைச்சராகப் பதவியேற்றவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இந்தியஅரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்கவும், அவர்களின்முன்னேற்றத்திற்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் என்றால் அது மிகையாகாது.

தமிழகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகத் தங்களை இணைத்துக்கொண்டு, பலர் அரிய தொண்டுகளை ஆற்றி வருகின்றனர். அந்த தொண்டுகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர்விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது தமிழ்நாடு அரசு.

அதன்படி, 2019ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனச் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வருகிற 30ஆம் தேதிக்குள்சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon