மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

இனி விளம்பரங்களில் பொய் சொல்ல முடியாது!

இனி விளம்பரங்களில் பொய் சொல்ல முடியாது!

விளம்பரங்களில் வழங்கப்படும் உத்தரவாதங்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் ஒழுங்குமுறைகளை வகுத்துள்ளது.

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளுக்கான விளம்பரங்களில் வழங்கப்படும் உறுதிமொழிகளுக்கும், உத்தரவாதங்களுக்குமான இறுதி செய்யப்பட்ட ஒழுங்குமுறைகளை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் விரைவில் வெளியிடவுள்ளது. நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் வழங்கும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார உத்தரவாதங்களைக் குறிவைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாலின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் அண்மையில் நடத்திய ஆய்வு முடிவுகள் நவம்பர் 13ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையில், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 6,432 பால் மாதிரிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் (1.2 விழுக்காடு), நுண்ணுயிர் கொல்லி மருந்துகள், பூசண நச்சுப் பொருட்கள், அமோனியம் சல்பேட் போன்ற அசுத்தப் பொருட்கள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் தலைமைச் செயலதிகாரியான பவன் அகர்வால் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் உத்தரவாதங்களுக்கான ஒழுங்குமுறைகளை நாங்கள் விரைவில் அறிவிப்போம். இந்த ஒழுங்குமுறைகளுக்குச் சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon