மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சுற்றுலாவின் மைல்கல்!

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சுற்றுலாவின் மைல்கல்!

விளம்பரம்

உலக சுற்றுலா விரும்பிகளுக்கு மிகவும் மனமுவந்த இடமாக விளங்குவது இந்தியா. ஒரே இனம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என வாழும் பல்வேறு மேற்குலக நாடுகளின் குடிமக்களுக்கு பல்வேறு இனம், பல்வேறு கலாச்சாரம், பல்வேறு மொழி என ஒன்றிணைந்து வாழும் இந்தியர்களையும், அவர்களது நாகரிகத்தையும், கலை வடிவங்களையும், கலைஞர்களின் திறமைகளையும் பார்ப்பது மிகப் பிடித்தமான செயல். இந்தியாவிலிருந்துகொண்டே இந்தியாவைப் புகழ்ந்து எழுதவேண்டுமென இதைக் குறிப்பிடவில்லை. காரணம் இருக்கிறது.

மத்திய சுற்றுலாத் துறை வெளியிட்டிருக்கும் தகவலின்படி, 2015ஆம் ஆண்டில் மட்டும் 80 லட்சத்து 27 ஆயிரத்து நூற்று முப்பத்து மூன்று(8027133) சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதிலுமிருந்தும் இந்தியாவுக்கு வந்து சென்றிருக்கின்றனர். இவர்கள் பயணம் செய்த விமானம், தங்கியிருந்த விடுதி, உணவு, விலைக்கு வாங்கிய பொருட்கள் என ஒரு லட்சத்து முப்பந்தைந்தாயிரத்து நூற்று தொண்ணூற்றி மூன்று கோடி ரூபாய்(1,35,193) அன்னிய செலாவணிப் பணமாக இந்தியாவுக்குள் வந்திருக்கிறது. இத்தனைக் கோடிகளை தங்களது மகிழ்ச்சிக்காகவும், மனத் திருப்திக்காகவும் செலவு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு, பலவிதமான சலுகைகளை இந்திய சுற்றுலாத் துறை செய்துகொடுத்திருக்கிறது.

அவர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, தங்கும் இடம், சுற்றிப் பார்க்கத் துணையாக ஆட்கள் என தேவைக்கு அதிகமாகவே இந்தியாவில் இயங்கிவருகின்றனர். சுற்றுலா என்பது சீசனுக்கு சீசன் மாறினாலும் இவர்களெல்லாம் அங்கேயே இருப்பவர்கள். ஒவ்வொரு சீசனுக்கும் பயணமாகும் மக்களுக்கு ஏற்றவகையில் தங்களது சேவையை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள். இவர்களின் இந்த சேவையைப் பாராட்டுவது யார்? அங்கீகாரம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு உந்துவது யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு சுற்றுலா விருதுகள். இந்த விருதினை ஒவ்வொரு வருடமும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தவறாமல் பெற்று வருவது எப்படி? என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

விளம்பர பகுதி

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon