மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

இன்று அரசாணை எரிப்பு போராட்டம்!

இன்று அரசாணை எரிப்பு போராட்டம்!

அரசு ஊழியர் சங்கம் சார்பில், இன்று (நவம்பர் 15) மாலை தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஊழியர்களுக்குப் பணிச்சுமை அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனாலும், அரசு சார்பில் நிறைவேற்ற முன்வரவில்லை.

இந்த நிலையில், புதிய பணியிடங்களை இனி தோற்றுவிப்பது இல்லை என்ற முடிவில் அரசு உள்ளது. தேவையில்லாத பணியிடங்களை ரத்து செய்வது என அரசாணை எண் 56இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையானது, புதிதாக வேலைக்கு வருபவர்களின் உரிமையைப் பறிக்கிறது. தமிழகத்தில் வேலை இல்லாமல், 80 லட்சம் இளைஞர்கள் உள்ள நிலையில், இனி வேலை இல்லை என அரசு கூறியிருப்பது படித்த இளைஞர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலாகும்.

எனவே, தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் உலை வைக்கும் அரசாணை 56ஐ தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நாளை (இன்று) மாலையில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon