மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

ஸ்டீல் துறைக்குத் துணை நிற்கும் அரசு!

ஸ்டீல் துறைக்குத் துணை நிற்கும் அரசு!வெற்றிநடை போடும் தமிழகம்

அனைத்து ஸ்டீல் பொருட்களையும் தரக் காட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின் கீழ் கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் நுகரப்படும் 53 விழுக்காடு ஸ்டீல் பொருட்களை ஏற்கெனவே தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைக்குள் மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக ஸ்டீல் துறை செயலாளரான பினாய் குமார் தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த ஸ்டீல் பொருட்களில் 85 விழுக்காடாகும். நவம்பர் 14ஆம் தேதியன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 56ஆவது தேசிய உலோக தினக் கொண்டாட்டத்தில் பினாய் குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ஸ்டீல் தொழிற்துறை தனது முழுமையான திறனை உணர்வதற்காக அரசு சில உதவிகளை வழங்கியுள்ளது. ஸ்டீல் பொருட்களை 100 விழுக்காடு தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவதற்கு அரசு அர்ப்பணித்துள்ளது.

இதன் விளைவாக, மின் விநியோகம், மருத்துவச் சேவைகள், உள்கட்டமைப்பு, கட்டுமானம் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும் தரக்குறைவான ஸ்டீல் பொருட்களின் உற்பத்தியும், இறக்குமதியும் கட்டுப்படுத்தப்படும். இந்தியாவின் தனிநபர் ஸ்டீல் நுகர்வு 69 கிலோவாக உள்ளது. ஆனால் உலக சராசரியோ 214 கிலோவாக இருக்கிறது. ஸ்டீல் மற்றும் உலோக தொழிற்துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள பிரச்சினைகளை நீக்குவதற்குத் தொழிற்துறை பங்குதாரர்களுடன் அரசு கலந்தாலோசித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று கூறினார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon