மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

டபுள் ஹீரோ: சளைக்காத ஜீவா

டபுள் ஹீரோ: சளைக்காத ஜீவா

ஜீவா நடிப்பில் மூன்று படங்கள் தயாராகிவரும் நிலையில் அடுத்ததாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி ரசிகர் கூட்டங்களைக் கொண்டுள்ள இரண்டு நாயகர்கள் சேர்ந்து நடிப்பது முன்பைவிட இப்போது அதிகரித்துள்ளது. திரையில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற பயம் நடிகர்கள் இந்த பாணியில் படங்களில் நடிக்க சம்மதிக்காததன் காரணமாக இருந்தது. ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதை அமையும் பட்சத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களிடம் கவனம் பெறும் என்ற புரிதல் தற்போது பரவலாகியுள்ளது. இரண்டு, மூன்று கதாநாயகர்கள் இணைந்து வரும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்ததில் இருந்தே இதை அறியலாம்.

மாஸ் கதாநாயகனாக காட்டிக்கொள்வதற்காக குறிப்பிட்ட பாணியில் மட்டுமே படங்களில் நடிப்பேன் என்றில்லாமல் காமெடி, ஆக்‌ஷன், டிராமா என அனைத்து பாணி படங்களிலும் நடித்துவருகிறார் ஜீவா. அதே போல் இரண்டு மூன்று கதாநாயகர்களின் படங்களில் நண்பன், டேவிட், போக்கிரி ராஜா, கலகலப்பு 2 ஆகிய படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்களின் எண்ணிக்கையும் ஆறுக்கு மேல் உள்ளன.

இந்நிலையில் ஜீவா, அருள் நிதியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஜீவாவின் குடும்ப நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள், நடிகர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஜீவா நடிப்பில் தற்போது கீ, கொரில்லா, ஜிப்ஸி ஆகிய படங்கள் உருவாகிவருகின்றன.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon