மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

நிலுவையில் 302 போக்சோ வழக்குகள்!

நிலுவையில் 302 போக்சோ வழக்குகள்!

சென்னையில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 320 வழக்குகளில் இதுவரை 5 வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநில குற்ற ஆவணக் காப்பகத்தில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, சென்னையில் போக்சோ சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நடப்பாண்டில் சென்னையில் போக்சோ சட்டத்தின்கீழ் 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 302 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், 5 வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 302 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லாததால், 11 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon