மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

சரிவை நோக்கி மிளகாய் விலை!

சரிவை நோக்கி மிளகாய் விலை!வெற்றிநடை போடும் தமிழகம்

டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இந்தியாவில் மிளகாய் விலை 10 சதவிகிதம் வரையில் சரிவடையும் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் மிளகாய்க்கான ஏற்றுமதி குறைந்துள்ளதாலும், உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் மிளகாய் விலை சரிவை எதிர்நோக்கியுள்ளது. மிளகாய் சாகுபடி செய்யப்படும் முக்கியப் பகுதிகளில் சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளதோடு, மத்தியப் பிரதேசத்தில் வழக்கத்தை விடக் கூடுதலான அளவில் மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே மிளகாயின் சராசரி விலை டிசம்பர் - ஜனவரி மாதங்களில் கிலோவுக்கு 90 ரூபாயாகக் குறையும் வாய்ப்பிருப்பதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். தற்போது மிளகாய் விலை ரூ.100 ஆக உள்ளது. விலைச் சரிவால் ஏற்றுமதியிலும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று பப்ரிகா ஓலியோஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநரான ஏ.ப்.முருகன், எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

மிளகாய் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், சென்ற ஆண்டில் மொத்தம் 4,43,900 டன் அளவிலான மிளகாயை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த சில ஆண்டுகளில் வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைத் தவிர சீனாவும் இந்தியாவிடமிருந்து அதிகமாக மிளகாயை இறக்குமதி செய்து வருகிறது. இந்திய மசாலா வாரியத்தின் தரவுகளின் படி, முன்பு 2,000 டன் அளவிலான மிளகாயை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துவந்த சீனா இப்போது 9,000 டன் வரையில் இறக்குமதி செய்கிறது. ஆனால் இந்த ஆண்டில் மிளகாய் ஏற்றுமதி மந்தமாகவே இருக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon