மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

தீவுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு!

தீவுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு!

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி தொடர்பான நிபுணத்துவ முறையைத் தீவுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியா தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "அடுத்த தலைமுறை மக்களுக்குப் பசுமையான உலகம் கிடைக்க வேண்டும் என்பதால் சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல்களில் இந்தியா அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 40 சதவிகித பயோ டீசல் போன்ற மாற்று எரிபொருட்களின் மூலமாக மின்சார சக்தியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. தற்போது அந்த இலக்கில் 33 சதவிகித அளவு எட்டப்பட்டுள்ளது.

காலக்கெடு முடிவதற்குள் இந்த இலக்கை இந்தியா அடைய வேண்டும். இதன்படி அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள் போன்ற பகுதிகளில் முழுக்க முழுக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலமாக இலக்கை அடையலாம் எனக் கணக்கிடப்படுகிறது. ஆகையால் இது தொடர்பான தொழில்நுட்ப நிபுணத்துவத்தைக் குட்டித் தீவுகளோடு பகிர்ந்துகொண்டு, உற்பத்தித் திறனை வளர்க்க இந்தியா தயாராக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon