மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 6 ஜுன் 2020

இணைந்தும் பயனில்லை!

இணைந்தும் பயனில்லை!

ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் நிலையில் அதற்கு ரூ.5,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதுவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இத்துறையில் அடியெடுத்து வைத்ததிலிருந்து கட்டணப் போர் மூண்டு வருவாய் இழப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் பெரும் இழப்புகளுக்கு ஆளானதோடு, தனது நீண்ட நாள் வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது. ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்களது சேவையையே நிறுத்திவிட்டன. இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிகப் பெரிய நிறுவனங்களாக இருந்த வோடஃபோன் மற்றும் ஐடியா செல்லுலார், ஜியோவின் போட்டியால் ஒரே நிறுவனமாக இணைந்துள்ளன.

இருப்பினும் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.5,000 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. 2019ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள் ரூ.25,000 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் இந்த இழப்பு வோடஃபோன் - ஐடியாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வோடஃபோன் - ஐடியாவின் வாடிக்கையாளர் வாயிலான வருவாய் சராசரியாக ரூ.88 ஆக மட்டுமே உள்ளது. ஆனால் ஜியோவின் வாடிக்கையாளர் வருவாய் ரூ.132 ஆகவும், ஏர்டெலின் வாடிக்கையாளர் வருவாய் ரூ.101 ஆகவும் இருக்கிறது. இதே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஜியோ நிறுவனம் ரூ.681 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ.119 கோடியும் வருவாய் ஈட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon