மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

பெருமேகமும் சிறுமேகமும்!

 பெருமேகமும் சிறுமேகமும்!

விளம்பரம்

அக்கரைப்பட்டியில் ஆழ்ந்து தியானம் செய்துவிட்டு அக்கம்பக்கம் இருக்கும் மரங்களையும், கொஞ்சம் அண்ணாந்து பார்த்து அக்கரைப்பட்டி மேகங்களையும் நோக்கிக் கொண்டிருந்தோம்.

மேகங்கள் எல்லாம் கீழே பார்த்தபடி வானத்தில் மேய்ந்துகொண்டிருந்தன. அதில் ஒரு பெருமேகம் தன் சிறுமேகத்திடம், “இதோ பார்... பிரம்மாண்டமாய் தெரிகிறது பார் அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயம்’’ என்று சுட்டிக் காட்டுகிறது.

அப்போது சிறுமேகம் பெருமேகத்திடம் கேட்கிறது. “எல்லாரும் அங்கே செல்கிறார்களே... நாம் செல்ல முடியுமா?” என்று.

பெருமேகம் பெருமூச்சோடு அதற்கு பதில் சொல்கிறது. “ஏன் முடியாது... தாராளமாக நாம் செல்லலாம். எப்படி என்று கேட்கிறாயா? நாம் வெறும் மேகமாய் இருந்தால் போதாது. கருமேகமாய் கருவுற வேண்டும். கருமேகமாய் கருவுற்றால் போதாது... நிறைமேகமாய் நீர் நிறைய தாங்க வேண்டும். அதுவும் போதாது.

நிறைமேகமாய் உருவான அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயத்தின் மேலே உலாவும் வரம் பெற வேண்டும். அதுவும் போதாது. அப்படி உலவும்போதே நம்மில் காற்று தீண்டி, அங்கேயே நாம் மழையாய் அக்கரைப்பட்டிக்குள் இறங்கிட வரம் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைத்தால்தான் நாம் அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயத்தின் மீது மழையாய் நாம் பொழிந்து, அதன் மூலம் பரிசுத்தம் அடைய முடியும்”

சிறுமேகம் கேட்டது. “மழையாக இறங்கினாலே நாம், அக்கரைப்பட்டி பாபாவை அடைந்துவிட முடியுமா? இவ்வளவு பிரம்மாண்டமாய் கோயில் கட்டி வைத்திருக்கிறார்களே... அதற்குள் நாம் எப்படி இறங்க முடியும்?

பெருமேகம் பதில் உரைத்தது.

“நல்ல கேள்வி. ஆனால் மழையாக இருத்தலே பாபாவுக்கு பிடிக்கும். நாம் ஏழையின் குடிசையை மூழ்கடிக்காமல் இருந்தால் பாபாவுக்குப் பிடிக்கும். நாம் உயிர் நீருக்குக் காத்திருக்கும் பயிர்கள் மேல் பெய்தால் பாபாவுக்குப் பிடிக்கும். அது போல அக்கரைப்பட்டி சாய்பாபாவை நாம் தரிசிக்க நல்ல வழி ஒன்றும் உள்ளது”

சிறுமேகம் சிலிர்த்தபடியே, “சொல் சொல்”என்றது.

பெருமேகம் விளக்கியது.

“நாம் அக்கரைப்பட்டியை நோக்கிச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் மழையாய் பொழிவோம். குறிப்பாக வியாழக் கிழமைகளில் பெய்தால் விசேஷம். ஏனென்றால் அன்று அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயத்தை நோக்கிப் பல பேர் செல்வார்கள். அவர்களின் கைகளில், விரல்களில், காதுகளில், தலைகளில், அவர்களின் பாதங்களில் கூட நாம் மழையாய் பொழிவோம். அவர்கள் பாபா சன்னிதியை அடையும்போது அவர்களின் மீதிருந்து நாம் அக்கரைப்படி பாபாவை தரிசிக்கலாம்.

அக்கரைப்பட்டி பாபா ஆலயத்தின் மீதும் நாம் பொழியலாம். அப்போது வழியலாம், வழியும்போது பாபாவை நாம் காணலாம்” என்றது பெருமேகம்.

இப்போது பெருமேகம், சிறுமேகம் ஆகிய இருமேகங்களும் கருமேகங்களாய் மாறி, அக்கரைப்பட்டியின் மேல் மழையாய் பொழிகின்றன.

அக்கரைப்பட்டிக்குச் செல்லும் பாபா பக்தர் ஒருவர் இந்த மழையில் நனைந்தபடி, “பாபா கோயிலுக்குப் போகும்போதுதான் இந்த மழை வரணுமா?” என்று கடிந்துகொள்கிறார்.

அவருக்குத் தெரியுமா, மேகங்கள் மேலே பேசிக்கொண்டது. ஆம். அவரோடு மேகங்கள் மழைத்துளிகளாய் மாறி அக்கரைப்பட்டி ஆலயத்துக்குள் செல்கின்றன. அருள்மழைக்காக!

அக்கரைப்பட்டியில் மழை பெய்தபோது ஒரு மேகம் என்னிடம் சொன்ன ரகசியம் இது. யாருக்கும் சொல்லிவிடாதீர்கள்!

ஆக்கம்: ஆரா

பாபா பரவசம் தொடரும்...

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
[email protected]
http://akkaraipattisaibaba.com/

விளம்பர பகுதி

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon