மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

நிதிஷ் வேவு பார்க்கிறார்: லாலு மகன்!

நிதிஷ் வேவு பார்க்கிறார்: லாலு மகன்!

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தன்னை வேவு பார்ப்பதாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி குற்றம்சாட்டியுள்ளார்.

பிகாரின் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் இருந்தபோது பாட்னாவின் ஐந்து சர்க்குலர் சாலையில் உள்ள பங்களாவில் தங்கி இருந்தார். மெகா கூட்டணியை நிதிஷ் முறித்துக்கொண்டதையடுத்து, தேஜஸ்வியின் பதவி பறிபோனது. பங்களாவில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார்.

ஆனால், நிதிஷ்குமார் பங்களாவுக்கு அருகிலேயே தேஜஸ்வியின் வீடு உள்ளது. இதை சாதகமாகக் கொண்டு தன்னை நிதிஷ் குமார் உளவு பார்ப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தேஜஸ்வி குற்றம்சாட்டியுள்ளார்.

தன் இல்லம் மற்றும் நிதிஷ் இல்லத்திற்கு இடைப்பட்ட பகுதியில் மட்டும் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது ஏன் என்றும், ஏற்கனவே நிரந்தர பாதுகாப்பு செக்போஸ்ட் உள்ள நிலையில் அங்கு மட்டும் எதற்காக கேமரா தேவை என்றும் அவர் வினா எழுப்பியுள்ளார்.

"பிகார் முதல்வரின் இல்லம் மூன்று பக்கங்கள் பிரதான சாலையாலும் ஒரு பக்கம் எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தாலும் சூழப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் விரோதியின் இல்லத்தை ஒட்டியுள்ள சுவரில் மட்டும் சிசிடிவி கேமரா தேவை என்று முதல்வர் உணர்ந்தாரா? இந்தச் சிறிய தந்திரங்கள் பயனற்றவை என நிரூபிக்கப்படும் என்பதை அவரிடம் யாராவது கூறுங்கள். ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள முதல்வருக்காகப் பாதுகாப்பை தேவைப்படும்போது பிகார் அரசு பலப்படுத்த வேண்டும். ஆனால், அண்டை வீட்டாரின் தனியுரிமையில் தலையிடும் வகையிலும் வேவு பார்க்கும்வகையிலும் உயர்தர சிசிடிவி கேமராக்களை நிறுவுவது சரிதானா?” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon