மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

ஆலைகளைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்கள்!

ஆலைகளைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்கள்!

இயற்கைச் சீற்றங்களால் எரிசக்தி உற்பத்தி ஆலைகளின் உள்கட்டமைப்பு சேதப்படுத்தப்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கட்டமைக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி ஆலைகள் அடிக்கடி தொல்லை கொடுக்கும் புயல்களால் பாதிப்புக்கு ஆளாவதாக எரிசக்தி மற்றும் வளங்கள் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், வடமேற்குப் பகுதிகளில் கட்டமைக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகள் கடுமையான மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் அவதிக்குள்ளாவதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வை நடத்துவதற்காக எரிசக்தி மற்றும் வளங்கள் கழகத்தை இந்திய பெட்ரோலியத் தொழிற்துறை கூட்டமைப்பு நியமித்திருந்தது.

சுத்திகரிப்பு ஆலைகள், குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புகள் கடுமையான இயற்கைச் சீற்றங்களால் ஆபத்துக்குள்ளாவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தொல்படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய காலநிலைக் கொள்கைகளும் ஒரு பிரச்சினையாக உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் வருடாந்தர மழைப் பொழிவு 32 விழுக்காடு உயரும் எனவும், மழைப் பொழிவு நாட்களின் எண்ணிக்கையும் உயரும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. வடமேற்குப் பகுதிகளில் மழைப் பொழிவு நாட்களின் எண்ணிக்கை அதிகபட்ச உயர்வைக் காணும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 15 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon