மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

தாவர எண்ணெய் இறக்குமதி சரிவு!

தாவர எண்ணெய் இறக்குமதி சரிவு!

சென்ற ஆண்டில் இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி 2.72 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய தாவர எண்ணெய் இறக்குமதியாளராக உள்ள இந்தியா 2016 நவம்பர் முதல் 2017 அக்டோபர் வரையிலான பருவத்தில் மொத்தம் 15.4 மில்லியன் டன் அளவிலான தாவர எண்ணெய்யை இறக்குமதி செய்திருந்தது. இந்த அளவு 2017 நவம்பர் முதல் 2018 அக்டோபர் வரையிலான பருவத்தில் 15 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டதாக இந்திய சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா தனது உள்நாட்டுத் தேவையில் 70 சதவிகிதம் அளவை இறக்குமதி வாயிலாகவே பெறுகிறது. அதிலும் பாமாயில் இறக்குமதி மட்டும் 60 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.

தாவர எண்ணெய் இறக்குமதியில் சமையல் எண்ணெயின் பங்கு 14.51 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. சென்ற ஆண்டில் இதன் அளவு 15.07 மில்லியன் டன்னாக இருந்தது. இதில் சமையல் எண்ணெய் அல்லாத இதர எண்ணெய் இறக்குமதி அளவு 3,62,822 டன்னிலிருந்து 5,09,748 டன்னாக அதிகரித்துள்ளது. பாமாயில் இறக்குமதி 9.29 மில்லியன் டன்னிலிருந்து 8.7 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாகவே இந்தியாவில் சமையல் எண்ணெய்க்கான தேவை குறைந்து, விநியோகம் அதிகமாக இருந்ததால் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை 11 முதல் 25 சதவிகிதம் வரையில் சரிந்துவிட்டதாக சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon