மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

வெளியானது திருமண புகைப்படம்: பின்னணியில் அமைச்சர்?

வெளியானது திருமண புகைப்படம்: பின்னணியில் அமைச்சர்?

பாலிவுட் நட்சத்திரங்களும் புதிய திருமண ஜோடியுமான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தங்களது திருமணப் புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

பாலிவுட்டின் முன்னணி ஜோடியான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் காதலித்து வரும் தகவல் சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்த வேளையில், திருமண தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா திருமணத்துக்குப் பின்னர், இந்தியா முழுவதும் அதிக கவனம் பெற்ற திருமணமாக இது அமைந்தது.

இவர்களது திருமணம் பிரமாண்டமான முறையில் கடந்த இரு தினங்களாக (நவம்பர் 14,15) இத்தாலியில் நடைபெற்றது. திருமணம் நடைபெற்றதே தவிர, திருமணம் தொடர்பான எந்தப் புகைப்படமும் வெளிவராதவாறு பார்த்துக்கொண்டனர். மணக்கோலத்தில் இருவரையும் காண, அனைவரும் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், திருமணம் தொடர்பான படங்கள் வெளியாகவில்லை.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தானும் தீப்-வீர் திருமண புகைப்படங்களைக் காண ஆர்வமாக இருப்பதாகத் தனது இன்ஸ்டகிராமில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் தங்களது ட்விட்டரில் திருமணம் தொடர்பான இரண்டு புகைப்படங்களை வெளியிட்டனர். படத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே # DeepikaWedsRanveer ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon