மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

எமோஷனல் மோடில் விஸ்வாசம்!

எமோஷனல் மோடில் விஸ்வாசம்!

விஸ்வாசத்தின் வாயிலாக அஜித் படமொன்றிற்கு டி.இமான் முதன்முதலாக இசையமைக்கும் நிலையில் இப்படத்தின் பாடல்கள் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் படம் விஸ்வாசம். பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ள நிலையில், புனேயில் நடைபெற்றுவந்த இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுவதுமாக முடிந்துள்ளன.

போஸ்டர்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் இசை குறித்து எந்தத் தகவலும் இதுவரை இல்லை. இந்நிலையில், ட்விட்டரில் இதுகுறித்து முதன்முறையாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார் இப்பட பாடலாசிரியரான விவேகா. அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “இந்தப் படத்தில் அற்புதமான மெலடி பாடல் ஒன்றை இணைக்கும் பொருட்டு இயக்குநர் சிவா மற்றும் இசையமைப்பாளர் டி.இமானுடன் சந்திப்பு நிகழ்ந்தது” எனக் கூறியுள்ளார். மேலும் அவரது அடுத்த பதிவிலேயே “அது ஒரு ஹார்ட் டச்சிங்கான பின்னணி பாடல்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் புதிதாக ஒரு எமோஷனல் பாடல் தற்போது பின்னணிப் பாடலாக இணைக்கப்பட்டிருப்பதால், இந்தப் படம் எமோஷனலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரத்தில் அண்ணன் - தம்பிகள், வேதாளத்தில் அண்ணன் - தங்கை, விவேகத்தில் நண்பன் என அஜித்திற்கு செண்டிமெண்ட் வைத்திருந்த சிவா, இதில் என்ன மாதிரியான கதைக்களத்தைத் தேர்ந்ந்தெடுத்திருப்பார் எனும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon