மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

விவசாய வளர்ச்சியில் அதிகக் கவனம்!

விவசாய வளர்ச்சியில் அதிகக் கவனம்!

நியாயமான விலை, தரமான உள்கட்டமைப்பு மற்றும் குறைவான வட்டியுடைய கடன் போன்ற நீண்ட நாள் பலன் தரக்கூடிய அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

"விவசாயத் துறை நிறைய பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்குப் போதுமான தீர்வுகள் தற்போதைக்கு இல்லை. இலவச மின்சாரம் மற்றும் கடன் தள்ளுபடி என்று சொல்லிக்கொள்வதெல்லாம் தற்காலிகம்தான்" என்று நவம்பர் 15ஆம் தேதி மும்பைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ”நியாயமான விலை, விவசாயத்திற்குத் தரமான உள்கட்டமைப்பு மற்றும் குறைவான வட்டியுடைய கடன் போன்ற நீண்ட நாள் பலன் தரக்கூடிய விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. விவசாயத்தைச் சிறந்த முறையில் வளர்க்க வேண்டுமென்றால் கூட்டுறவு இயக்கத்தைப் பலப்படுத்த வேண்டும். 25 கோடி உறுப்பினர்களைக் கொண்ட 8.50 லட்சம் கூட்டுறவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவிகித கிராமப்புற மக்களை உள்ளடக்கியதாகும்.

அதேபோல, விவசாயப் பொருட்களுக்கான அடிப்படை ஆதரவு விலையை இந்த அரசு உயர்த்தியுள்ளது. இதில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறவும், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும், உரங்களையும் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் உற்பத்திச் செலவினங்களை குறைத்துக் கொள்ளவும், கரிம உரங்களைப் பயன்படுத்துவதற்கும், தண்ணீரை பக்குவமாகச் செலவிடுவதற்கும் தக்க முறையில் விவசாயிகளுக்கு அறிவுரை கூறி கூட்டுறவு நிறுவனங்கள் உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon