மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

கலாய்ச்சது போதும், களத்துக்கு போவோம்: அப்டேட் குமாரு

கலாய்ச்சது போதும், களத்துக்கு போவோம்: அப்டேட் குமாரு

‘பேச்சாடா பேசுனீங்க கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க’ன்னு வடிவேலு மாதிரி தான் கேக்கனும்.. 120 கிமீ வேகத்துல ஒரு புயல் வருது. தன்னோட தலைவன் படத்தை ரிலீஸ் ஆகாம தடுத்தா கெத்தா வீடியோ விடுற சின்ன பசங்க மாதிரி பேசிகிட்டு இருந்தா புயல் பார்த்துகிட்டு சும்மா இருக்குமா.. புயலுக்கு கஜான்னு பேர் வச்சதுக்கு பதிலா என்ன பேரு வச்சுருக்கலாம்னு தான் இன்னும் விளையாடிகிட்டு இருக்காங்க. என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுருக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எப்படி நிவாரணம் கொண்டு போறதுன்னுல்லாம் பேச்சை காணோம். ஒருவேளை சென்னையில நடந்தா மட்டும் தான் பொறுப்பை காட்டுவாங்களான்னு தெரியலை. இவங்க இவ்ளோ நாள் கலாய்ச்ச தமிழ் நாடு அரசே களத்துல ராப்பகலாக இறங்கி வேலை செய்யுது. பசங்க இன்னும் இங்க தான் சுத்திகிட்டு இருக்காங்க. மோடி காலையில இருந்து ட்விட்டர்ல ரொம்ப பிஸியா இருக்கத் தான் செய்யுறாரு. ஆனா அவருக்கு தமிழ்நாடு மட்டும் ஞாபகத்துக்கு வராம போயிருச்சு. அவரை எவ்வளவு நாளைக்கு தான் சொல்லிகிட்டு இருக்குறது. வாங்க நாம போவோம். சட்டுபுட்டுன்னு அப்டேட்டை பார்த்துட்டு கிளம்புங்க.

@Kozhiyaar

லேசா தடுக்கி விழுந்தால் கூட புதைத்து விட காத்திருக்கும் கூட்டத்திற்கு மத்தியில் தான் வாழ்க்கை ஓடுகிறது!!!

@kathir_twits

ஒவ்வொரு புயலின் போதும்

மறுஜென்மம் கிடைக்காதா என்று ஏங்குகின்றன வாழைமரங்கள் !!

@amuduarattai

செய்தி: காவிரித்தாய்க்கு 125 அடி சிலை அமைக்க கர்நாடக அரசு முடிவு.

பஞ்ச்: "ஜெயலலிதாக்கு 500 அடியில் சிலை வைக்கப்படும்" என்ற அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் இங்கு.

@MJ_twets

சமைக்கிறதுலே ரொம்ப ஈஸி உப்மா செய்றது தான், சாப்பிடுறதுலே ரொம்ப கஷ்டம் அந்த உப்மாவ சாப்பிடுறது தான்.!

@amuduarattai

செய்தி: ஊழல் ஆட்சி எப்போது மாறுமென மக்கள் எதிர்பார்ப்பு. - மு.க.ஸ்டாலின்.

பஞ்ச்: இங்கே மக்கள் என்பது நீங்களா தலைவரே.!?

@Thaadikkaran

பூச்சாண்டிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதில் முன்னுக்கு வந்துவிட்டது செல்போன்..!!

@Kozhiyaar

சிபிஐலாம் ஊழலுக்கு அப்பாற்பட்டது என்ற பிம்பத்தை உடைத்தது வேண்டுமானால் மோடி அரசின் சாதனையாக வைத்துக் கொள்ளலாம்!

@வெ. பூபதி

வாய்ப்பை விட்டுக்கொடுத்தால் முட்டாள், வாய்ப்பை பயன்படுத்திகிட்டா சந்தரப்பவாதி. வாய்ப்பை உருவாக்கிகிட்டா சுயநலவாதி!

@Kozhiyaar

புயலை விட 'பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை' எனும் அறிவிப்பு தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது!!!

@Vellingiri Vaiko

அடுத்த புயலுக்கு மோடின்னு பெயர் வைங்க வெளிநாடு போய்டும்

@HAJAMYDEENNKS

என்னையவா கிண்டல் பண்றிங்கன்னு சேர்த்து வச்சு சம்பவம் பண்ணிக்கிட்டு இருக்கு கஜா புயல் !

@rahimgazali

வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் ஆசையை 'வேரோடு பிடிங்கிவிட்டது' கஜா புயல்.

@Annaiinpillai

பேருந்து பயணத்தில் மற்றவர்களை ஈர்க்க சாகசம் செய்யும் இளைஞர்கள் மரணத்தை காலிங் பெல் அடித்து அழைக்கிறார்கள்!

@mufthimohamed1

இனி வரும் புயலுக்கு லோட்டஸ் என பெயர் வைத்தால் தமிழ்நாட்டை எட்டிக் கூட பார்க்காது என்று எத்தனை பேருக்கு தெரியும்..?

@amuduarattai

மோடிக்கு இன்னொரு வாய்ப்பு தரவேண்டும்- நாராயணமூர்த்தி.

ஒரு வாய்ப்பு கொடுத்ததுக்கே, சல்லி சல்லியா நொறுக்கிட்டாரே. இதில் இன்னொரு வாய்ப்பா.!?

@Fazil_Amf

கஜா புயல்..! - தமிழகத்துக்கு உதவத் தயார் - ராஜ்நாத் சிங் அறிவிப்பு!

எப்படி கேரளாவுக்கு உதவி செய்த மாதிரியா..!!?

@erasaravanan

"நீ புள்ளை மாதிரி வளர்த்த எல்லா மரமும் போச்சுப்பா" எனக் கதறுகிறார் என் தாய். "நீ இங்க வர வேணாம்ணே. இவ்வளவு கோரத்தை தாங்க மாட்டே" என்கிறான் தம்பி. ஒவ்வொரு மரத்துக்கும் பெயர் வைத்து குடும்ப உறுப்பினர் போல வளர்த்தோம். மற்றவர்களின் பாதிப்பு இதைவிட துயரம். ஒரே நாளில் அனாதையானோம்!

@rahimgazali

கடலோர ஊர்களை மட்டுமல்லாது, கடலுக்கு சம்பந்தமே இல்லாத ஊர்களையும் அசைத்து பார்த்துவிட்டு போயிருக்கிறது கஜா. நான் வெறும் கஜா அல்ல, மதம் கொண்ட கஜா என்று சொல்லிவிட்டு சென்றுள்ளது.

இனிமேல் யாராவது புயலை 'தைரியமிருந்தா எங்க ஊருக்கு வா, வந்து பாரு' என்றெல்லாம் கூப்பிடுவீங்க?

-லாக் ஆஃப்

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon