மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

ரஹ்மானுடன் ட்விட்டர் சிஇஓ சந்திப்பு!

ரஹ்மானுடன் ட்விட்டர் சிஇஓ சந்திப்பு!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் தொடர்ந்து இயங்குபவர். ட்விட்டரில் அவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் முக்கியமான உபயோகிப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். இந்த நிலையில் இந்தியா வந்துள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து பேசினார்.

இந்தியாவில் ட்விட்டர் எந்த அளவிற்கு பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் பயன்படுகிறது. அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து இங்குள்ள பிரகமுகர்களிடம் கருத்து கேட்கவே வந்திருக்கிறார் ஜேக். கலைத்துறையில் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக் கானை சந்தித்து பேசியுள்ளார்.

ரஹ்மானுடனான அவரது சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் தங்களின் ஆலோசகர்களை நியமிக்க இருப்பதாகவும், இந்தியாவில் கலைத்துறையின் சார்பில் ஆலோசகராகப் பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜேக் டோர்சே, தன்னை சந்தித்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் "ஜேக் டோர்சேவுடனான சந்திப்பு ஊக்கம் அளிப்பதாக உள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கடந்த திங்கள் அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த ஜேக் டோர்சே, டில்லியில் தவறான தகவல்கள் பரவியது உட்படப் பல சிக்கல்கள் பற்றி இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon