மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

தொழில்நுட்பங்களால் உயரும் வேலைவாய்ப்பு!

தொழில்நுட்பங்களால் உயரும் வேலைவாய்ப்பு!

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் 2027ஆம் ஆண்டுக்குள் 14 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஐடி துறையில் உருவாகுமென்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச டேட்டா கார்பரேசன் (ஐ.டி.சி.) நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: ‘புதிய தொழில்நுட்பங்களான சைபர் பாதுகாப்பு, இணையம் சார்ந்த கருவிகள் (ஐ.ஓ.டி.) மற்றும் பிக் டேட்டா போன்றவற்றால் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சமூக ஊடக நிர்வாகிகள், இயந்திர வழிக் கற்றல் வடிவமைப்பாளர்கள், வணிக நுண்ணறிவு வடிவமைப்பாளர்கள், சைபர் பாதுகாப்பு சிறப்பு நிபுணர்கள், இணையம் சார்ந்த கருவி வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வரும் ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

இத்துறைகளில் திறன் மிக்கவர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கும். எனவே ஏற்கெனவே தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இருப்பவர்கள் தங்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை பணியமர்த்துதலில் சர்டிஃபிகேட் கோர்ஸ் முக்கியப் பங்கு வகிக்கும். 89 விழுக்காடு அளவுக்கு உயர்ந்த பணிநிலைகளுக்கு அமர்த்தப்படுபவர்கள் சர்டிஃபிகேட் கோர்ஸ் முடித்தவர்களாகவே வருங்காலத்தில் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களால் 2027ஆம் ஆண்டுக்குள் 14 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.’

ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களால் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் சரியும் என்று அஞ்சப்படும் நிலையில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon