மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு!

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலவி வருவதால், இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இது குறித்து, நேற்று (டிசம்பர் 2) செய்திக்குறிப்பொன்றை அம்மையம் வெளியிட்டுள்ளது. “டிசம்பர் 3ஆம் தேதியன்று தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள், ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதி, ராயலசீமா வட்டாரத்தில் பெருமழை இருக்கும். டிசம்பர் 4ஆம் தேதியன்று தெற்கு உள்பகுதி கர்நாடகா, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்பகுதிகளில் பெருமழை பரவலாகப் பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 6ஆம் தேதியன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலவி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “வரும் 6ஆம் தேதியன்று, தென்கிழக்கு வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இது மாறக் கூடும்” என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

திங்கள், 3 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon