மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

பாரம்பரிய கிறிஸ்துமஸ் மரம் (டேன்பாம்) இங்கிருந்து வந்ததோ?

பாரம்பரிய கிறிஸ்துமஸ் மரம் (டேன்பாம்) இங்கிருந்து வந்ததோ?

தினப்பெட்டகம் - 10 (5.12.2018)

ஜெர்மனி பற்றிய சில வியத்தகு குறிப்புகளை இங்கு காண்போம்...

1. ஐரோப்பாவிலேயே மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை (Most Densely Populated) கொண்ட நாடு, ஜெர்மனி.

2. இப்போது வரை, ஜெர்மனி நாட்டில் மூன்றில் ஒரு பகுதி காடுகளாகவே உள்ளது.

3. ஜெர்மனி நாட்டின் தலைநகரம் இதுவரை ஏழு முறை மாறியிருக்கிறது.

4. உலகிலேயே இரண்டாவது வெற்றிகரமான கால்பந்து அணி ஜெர்மனி தான்.

5. உலகிலேயே முதன்முதலில் ஜெர்மன் மொழியில்தான் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன.

6. ஜெர்மனியின் நெடுஞ்சாலைகளில் 65% வேகத்தடை கிடையாது.

7. ஜெர்மனியில் 1500க்கும் அதிகமான பீர் வகைகள் உள்ளன.

8. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய ரயில் நிலையம் ஜெர்மனியிலுள்ள பெர்லினில் அமைந்திருக்கிறது.

9. உலகிலேயே 400க்கும் அதிகமான உயிரியல் பூங்காக்கள் உள்ள நாடு, ஜெர்மனி.

10. ஜெர்மன் மொழியில் 35 வகைகள் உள்ளன (Dialects). பாரம்பரிய கிறிஸ்துமஸ் மரம் (டேன்பாம்) ஜெர்மனியிலிருந்து வந்தது.

- ஆஸிஃபா

முந்தைய பகுதி : மைதா என்னும் எமன்!

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon