மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

வருவாய் பற்றாக்குறையில் தமிழகம்!

வருவாய் பற்றாக்குறையில் தமிழகம்!

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.23,921 கோடியை எட்டுமென்று தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனவரி 7ஆம் தேதி அவர் சட்டமன்றத்தில் பேசுகையில், “நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.23,921 கோடியை எட்டுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் ரூ.6,431.17 கோடி அதிகமாகும்” என்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘எதிர்பாராதவிதமாக கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய ரூ.2,298.25 கோடியைச் செலவு செய்ய நேர்ந்தது. இந்த கஜா புயல் பேரழிவையும், பெரும் சேதத்தையும் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளப் போதுமான நிதியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. போக்குவரத்துக் கழகத்தின் சுமையைக் குறைக்க ரூ.998.29 ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் டீசல் விலை உயர்வைக் கண்ட நேரத்தில் அதனைச் சரிக்கட்ட மட்டும் ரூ.198.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 3,087 கோயில்களில் சிலைகள் திருட்டைக் கட்டுப்படுத்த எச்சரிக்கை ஒலி எழுப்பும் மணி மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.309 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ரூ.149.54 கோடியும், கூட்டுறவுத் துறைக்குக் கூடுதலாக ரூ.259.39 கோடியும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ரூ.396 கோடியும் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon