மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

சர்ச்சை கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு நோட்டீஸ்!

சர்ச்சை  கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு நோட்டீஸ்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் ‘காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்குபெறும் அந்நிகழ்ச்சியில் கிரிக்கெட், தனிப்பட்ட வாழ்க்கை என பல விஷயங்கள் குறித்தும் பேசினர்.

சச்சின் சிறந்த பேட்ஸ்மேனா, கோலி சிறந்த பேட்ஸ்மேனா என்ற கேள்விக்கு இருவரும் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. ஆனால், ஹர்த்திக் பாண்டியாவின் பேச்சு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக பிசிசிஐ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் அளவுக்குச் சென்றுள்ளது.

நிகழ்ச்சியின்போது தனது பெற்றோரிடம் தான் பழகி வரும் பெண்கள் குறித்தும், தனது பாலியல் உறவுகள் குறித்தும் கூறியதாக பாண்ட்யா தெரிவித்திருந்தார். மேலும் பெண்கள் பற்றி சில மோசமான கருத்துகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார். இதற்குப் பல விமர்சனங்களும், எதிர்ப்புகளும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

அதைத் தொடர்ந்து பாண்ட்யா, “காபி வித் கரண் நிகழ்ச்சியில் எந்த உள்நோக்கத்துடனும் நான் எனது கருத்தைத் தெரிவிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியின் போக்கிலேயே சில விஷயங்களைக் கூறினேன். எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த விதத்திலாவது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் குழுத் தலைவர் வினோத் ராய், “ஹர்த்திக் பாண்ட்யா ட்விட்டரில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். இது தொடர்பாக ஹர்த்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகிய இருவருக்கும் 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon