மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

மதுரை: பாஸ்போர்ட் விநியோகம் உயர்வு!

மதுரை: பாஸ்போர்ட் விநியோகம் உயர்வு!

மதுரையில் இந்த ஆண்டில் 2.7 லட்சம் பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி டி.அருண் பிரசாத் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “பாஸ்போர்ட் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதால் மதுரை பிராந்தியத்தில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டின் இறுதியில் பாஸ்போர்ட் விதிமுறைகள் மாற்றப்பட்டது. அதனால் 2017ஆம் ஆண்டில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 22 விழுக்காடு அதிகரித்தது.

2018ஆம் ஆண்டில் 10 விழுக்காடு அதிகரித்தது. 2018ஆம் ஆண்டில் மொத்தமாக 2.7 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டிருந்தது. புதிதாக பாஸ்போர்ட் பெறுபவர்களுக்கு அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் மையங்கள் (பிஓபிகே) பெரிதும் பயன்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் 21,000 பேர் இந்த பாஸ்போர்ட் மையங்களின் வழியாக பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்” என்றார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon