மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

சபரிமலை: மாறுவேடத்தில் பெண் தரிசனம்!

சபரிமலை: மாறுவேடத்தில் பெண் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ததாக 35 வயதான பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சபரிமலை கோயிலுக்குள் சென்று இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததையடுத்து, கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருவதற்கு முன், ஐயப்பன் கோயில் ஐதீகத்தைத் தகர்க்க முதல்வர் பினராயி விஜயன், மகர விளக்கு பூஜைக்கு முன்பு சில பெண்களை தரிசனம் செய்ய வைக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய தகவலையடுத்து, போராட்டக்காரர்கள் பம்பை முதல் சபரிமலை வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொல்லம் மாவட்டம் சாத்தனூரைச் சேர்ந்தவர் மஞ்சு (35). இவர், ஐயப்பனைத் தரிசனம் செய்ததாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டாம்படி ஏறி சாமி தரிசனம் செய்ததாக கேரள செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டியும் அளித்துள்ளார். அதில், தலைமுடிக்கு வெள்ளை டை அடித்து 50 வயதைத் தாண்டிய பெண் போன்று மாறுவேடத்தில் சாமி தரிசனம் செய்ததாகவும், இரண்டு மணி நேரம் அங்கே இருந்ததாகவும் இவர் கூறியுள்ளார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவைத் தற்போது நீக்கம் செய்துள்ளார்.

ஆனால், இவர் சாமி தரிசனம் செய்தது இதுவரை அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இவர் ஏற்கெனவே சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்யச் சென்றபோது, போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon