மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 12 ஜூலை 2020

இந்தி கட்டாயமா? அமைச்சர் மறுப்பு!

இந்தி கட்டாயமா? அமைச்சர் மறுப்பு!

நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான மற்றும் அறிவியல் சார்ந்த கல்விக் கொள்கையைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருந்தது. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையைத் தயாரிக்க கஸ்தூரிரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய அரசுக்குச் சில பரிந்துரைகளை அளித்ததாகத் தகவல் வெளியானது.

அதில், “அனைத்துப் பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். ஒரே மாதிரியான அறிவியல் மற்றும் கணித பாடங்கள் அமைக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இன்று (ஜனவரி 10) காலை தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

“கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரை செய்துள்ள புதிய கல்விக் கொள்கையில் வரைவு அறிக்கையில் எந்த மொழியையும் கட்டாயமாக்க வேண்டும் என குறிப்பிடவில்லை. இது தவறான தகவல். ஊடகங்களில் வெளியான தவறான செய்திக்கு இந்த விளக்கம் தேவையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon