மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

ஜிஎஸ்டி: சிறு தொழில்களுக்கு வரி விலக்கு!

ஜிஎஸ்டி: சிறு தொழில்களுக்கு வரி விலக்கு!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 32ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஜிஎஸ்டியில் தற்போது ஆண்டு வருமான வரி தாக்கலுக்கான குறைந்தபட்ச வரம்பு ரூ.20 லட்சமாக உள்ளது. இந்த இலக்கை ரூ.75 லட்சமாக உயர்த்த இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள பல்வேறு மாநில அமைச்சர்கள் இந்தக் கோரிக்கையை பல மாதங்களாக முன்வைத்து வருகின்றனர். இதையடுத்து சிறு, குறு நிறுவனங்களின் வரிச் சுமையை தவிர்க்கும் விதமாக இந்த முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கவுள்ளது.

கடைசியாக டிசம்பர் 22ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 31ஆவது கூட்டத்தில் 23 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளுக்கு (தமிழகத்தில் லாட்டரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது) தற்போது 12 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதை 28 விழுக்காடாக உயர்த்தவும் திட்டமிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon